அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு பாகுபலி போல உருவாக வேண்டும் : மழையில் குடைபிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி

19 July 2021, 11:15 am
modi - updatenews360
Quick Share

டெல்லி : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைவரும் பாகுபலி போல உருவாக வேண்டும் என்று மழையில் குடைத்தபடி செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆக.,13ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற வளாகம் வந்தார்.

அப்போது, அங்கு மழை பெய்த நிலையிலும், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அவர் பேசியதாவது :- மழைக்காலக் கூட்டத் தொடருக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசையை போட்டுக் கொண்டு அனைவரும் பாகுபலி போல வலுவானவர்களாக உருவாக வேண்டும்.

இந்த மழைக்காலக் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடினமான கேள்விகளை கேட்கட்டும். ஆனால், மத்திய அரசு கொடுக்கும் விளக்கத்தை எதிர்கட்சிகள் அமைதியான முறையில் விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 130

0

0

Leave a Reply