கேரள விமான விபத்து மிகுந்த மனவேதனை தருகிறது…! பிரதமர் மோடி டுவீட்…!

8 August 2020, 10:53 am
Modi_UpdateNews360 (2)
Quick Share

டெல்லி: கேரள விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

துபாயிலிருந்து புறப்பட்டு கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் 20 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து, குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.  மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் கூறி உள்ளார்.

அப்போது மீட்பு பணிகள் குறித்து, பினராயி விஜயன் மோடியிடம்  விவரித்துள்ளார். இந்நிலையில் விமான விபத்து குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி கேரள விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.

என் எண்ணங்கள் யாவும்  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் இருக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Views: - 7

0

0