நாடு திரும்பினார் பிரதமர் மோடி… கிளாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் இசைக்கருவிகளை வாசித்து குதூகலம்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
3 November 2021, 9:59 am
Pm modi - updatenews360
Quick Share

இத்தாலி, ஸ்காட்லாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இன்று நாடு திரும்பினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள் கலந்து கொண்ட ஜி20 மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த அக்.,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், உலக நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போதைய காலகட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட இரு மாநாடுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, கிளாஸ்கோவில் இருந்து இந்தியா திரும்பினார். நேற்று இரவு 12 மணியளவில் கிளாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவர் இன்று காலை 8 மணியளவில் டெல்லி வந்தடைந்தார்.

முன்னதாக, கிளாஸ்கோவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இசைக்கருவிகள் வாசித்து வழியனுப்பினர். அப்போது, அந்த இசைக்கருவிகளை பிரதமர் மோடியும் வாசித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 443

0

0