நாளை சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

By: Udayaraman
20 June 2021, 11:48 pm
Quick Share

டெல்லி: 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

நாளை 7 வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடத்தின் யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் ‘ஆரோக்கியத்திற்கான யோகா’ என்பதாகும். டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் சேனல்களில் நேரிடையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உரை நிகழ்த்த உள்ளார்.

அதன்பின்னர் யோகா பயிற்சி செய்யும் விளக்கம் நடைபெறும். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், உள்ளிட்ட பல ஆன்மீக தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள், ஆரோக்கிய வாழ்விற்கான யோகா குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் சர்வதேச யோக தினத்திற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. உலக அளவில் சுமார் 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 208

0

0