ஜப்பான் முன்னாள் பிரதமர் உடல்நலக்குறைவு..! வேதனையடைந்த மோடி..! விரைவில் குணமடைய பிரார்த்தனை..!
29 August 2020, 1:40 pmஜப்பான் பிரதமர் தனது உடல்நிலையை மேற்கோள் காட்டி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது முன்னாள் ஜப்பானிய பிரதிநிதி ஷின்சோ அபேவை விரைவாக குணமடைய வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கேட்டு வேதனையடைகிறேன். என் அன்பு நண்பர் ஷின்சோ அபே. சமீபத்திய ஆண்டுகளில், உங்கள் புத்திசாலித்தனமான தலைமை மற்றும் தனிப்பட்ட அர்ப்பணிப்புடன், இந்தியா-ஜப்பான் கூட்டு முன்னெப்போதையும் விட ஆழமாகவும் வலுவாகவும் மாறிவிட்டது. உங்கள் உடைநிலை விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, அபே தனது உடல்நலக்குறைவு ஒரு முக்கிய பிரச்சினை என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகிய பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “மக்களுக்காக சிறந்த முடிவுகளை எடுக்க முடியாவிட்டால் நான் பிரதமராக இருக்க முடியாது. எனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.
அபே பல ஆண்டுகளாக அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியுடன் போராடுகிறார் என்று கூறப்படுகிறது.
2021 செப்டம்பரில் ஆளும் கட்சித் தலைவராக உள்ள அவரது பதவிக்காலம் உள்ள நிலையில், ஒரே வாரத்தில் இரண்டு முறை மருத்துவமனையில் அபே சிகிச்சை மேற்கொண்டதால் அவர் பணியில் இருக்க முடியுமா என்ற கேள்விகளை எழுப்பிய நிலையில், அவர் தானாகவே பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.