70’வது பிறந்தநாளைக் கொண்டாடும் மோடி..! தலைவர்கள் வாழ்த்து..!

17 September 2020, 9:47 am
Happy_Birthyday_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி தனது 70’வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடமிருந்தும், பல பிரபலங்கள் மற்றும் கோடானுகோடி தொண்டர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துக்களில், “ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதில் பிரதமர் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளார். மேலும் அவரது தலைமையிலிருந்து தேசம் பெரிதும் பயனடைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அவரது புத்திசாலித்தனமான தலைமை, உறுதியான நம்பிக்கை மற்றும் தீர்க்கமான நடவடிக்கை ஆகியவற்றால் இந்தியா பெருமளவில் பயனடைந்துள்ளது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதில் அவர் உறுதியுடன் பணியாற்றி வருகிறார். அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி ஜி பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று ராகுல் காந்தி ட்விட்டரில் எழுதினார்.

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் இங்கே :

Views: - 11

0

0