அதிகளவில் ஆன்லைனில் கண்டுகளித்த வெளிநாட்டினர்..! மோடியின் பூமி பூஜைக்கு ஸ்பெஷல் வரவேற்பு..! தூர்தர்சன் தகவல்..!

6 August 2020, 6:23 pm
Ram_Temple_Bhoomi_Poojan_UpdateNews360
Quick Share

ஆகஸ்ட் 5’ஆம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜையின் நேரடி ஒளிபரப்பு உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

மத்திய அரசின் ஊடகமான தூர்தர்ஷன் இந்த நிகழ்வை நேரடியாக ஒளி பரப்பியது. பல கேமராக்கள், அவுட்சைட் பிராட்காஸ்டிங் (ஓபி) மற்றும் டிஜிட்டல் சேட்டிலைட் நியூஸ் சேகரிப்பு (டிஎஸ்என்ஜி) வேன்களை பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பை எந்தவித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடத்தியது.

இதை யூடியூப் ஸ்ட்ரீம்களிலும் மக்கள் நேரடியாக கண்டுகளித்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன், குவைத், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிக பார்வையாளர்கள் வந்ததாக தூர்தர்ஷன் கூறியுள்ளது.

இந்தியாவில், 200’க்கும் மேற்பட்ட சேனல்கள் இந்த நிகழ்வை தூர்தர்சனுடன் இணைந்து நேரடியாக ஒளிபரப்பியது.

பூமி பூஜையின் நிகழ்வுகள் உடனுக்குடன் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) மூலம் சுமார் 1200 நிலையங்களுக்கும், அசோசியேட்டட் பிரஸ் டெலிவிஷன் நியூஸ் (ஏபிடிஎன்) மூலமாகவும் உலகெங்கிலும் உள்ள 450 ஊடக நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தூர்தர்ஷனின் செய்தி பிரிவு டி.டி நியூஸ் ஆசிய பசிபிக் நாடுகளுடன் தனித்தனியாக காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது.

ராமர் கோவிலுக்காக பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் பூமி பூஜையை நடத்தினார். நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மோதலுக்கு தற்போது பூமி பூஜையின் மூலம் முடிவு கட்டப்பட்டுள்ளதாக மக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Views: - 4

0

0