பாஜகவில் இணைந்த மோடியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி..! உ.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..?

14 January 2021, 2:13 pm
Aravind_Kumar_Sharma_IAS_Joins_BJP_UpdateNews360
Quick Share

சிவில் சர்வீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அரவிந்த்குமார் சர்மா இன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் உத்தரபிரதேசத்தின் மௌ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், லக்னோவில் இன்று பாஜகவில் இணைந்தார்.  

1988 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அரவிந்த்குமார் சர்மா பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக வலம் வந்தார். இந்நிலையில் அவர் கடந்த திங்களன்று எம்.எஸ்.எம்.இ செயலாளர் பதவியில் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற்றார். நர்ந்திர மோடியுடன் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது சர்மா அவரின் கீழ் பணியாற்றினார்.

அக்டோபர் 2001’இல் ஷர்மா மோடியுடன் செயலாளராக சேர்ந்தார். 2014’இல் மோடி பிரதமரானபோது, குஜராத்தில் இருந்து பிரதமர் அலுவலக பணிக்கு மாற்றப்பட்ட மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் பட்டியலில் இவரும் ஒருவராக இருந்தார்.

பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றிய அவர், ஏப்ரல் 2020’இல் எம்.எஸ்.எம்.இ செயலாளராக பொறுப்பேற்றார்.

  பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கூறுகையில், சர்மா கட்சிக்காக பணியாற்ற விருப்பம் தெரிவித்ததோடு கட்சியில் சேர்ந்தார் எனக் கூறினார்.

ஜனவரி 28’ம் தேதி சட்டமன்றத்தின் 12 இடங்களுக்கான தேர்தலுக்கு வேட்பாளர்களை கட்சி இறுதி செய்யும் நேரத்தில் சர்மா பாஜகவில் சேர்ந்துள்ளதால், பாஜக வேட்பாளர்களில் சர்மாவும் ஒருவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Views: - 11

0

0