மோடி தலைமையில் டெல்லியில் பாஜக கூட்டம் தொடங்கியது..! தமிழக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்பு..!

Author: Sekar
13 March 2021, 9:06 pm
Modi_CEC_Meet_UpdateNews360
Quick Share

பாரதீய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நான்கு மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 27 முதல் நடைபெற உள்ளது.

தமிழகம் உட்பட தென் மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் இன்றே இறுதி  முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இங்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6’ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்சி ஏற்கனவே மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இரண்டு கட்டங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், மத்திய தேர்தல் குழு அசாமின் மூன்றாம் மற்றும் கடைசி கட்டங்களுக்கான வேட்பாளர்களையும், எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்காளத்திற்கு குறைந்தது இரண்டு கட்ட வேட்பாளர்களையும் இறுதி செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் மார்ச் 27 முதல் எட்டு கட்டங்களாக நடைபெறும். இறுதி சுற்று வாக்களிப்பு ஏப்ரல் 29’ஆம் தேதி நடைபெறுகிறது. 126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபைக்கான வாக்குப்பதிவு மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை மூன்று கட்டங்களாக நடைபெறும்.

நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் வாக்கு எண்ணிக்கை மே 2’ஆம் தேதி நடைபெறும்.

Views: - 83

0

0