“நம் தேசத்திற்கான மிகப்பெரும் சொத்து”..! குடியரசுத் தலைவருக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து..!

1 October 2020, 11:27 am
Ram_Nath_Kovind_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75’வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை வாழ்த்தி, அவரது உயர்ந்த நுண்ணறிவு மற்றும் கொள்கை விஷயங்களைப் பற்றிய புத்திசாலித்தனமான புரிதலுக்காக அவரைப் பாராட்டினார். அவை நம் தேசத்திற்கான பெரும் சொத்துக்கள் என்று கூறினார்.

ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 1, 1945’இல் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள பராங் கிராமத்தில் பிறந்தார். 
பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 1994 முதல் 2006 வரை 12 ஆண்டுகள் ராஜ்யசபா பதவியை வகித்துள்ளார்.

பின்னர் மோடி பிரதமாராக பதவியேற்ற பிறகு 2015 முதல் 2017 வரை பீகார் ஆளுநராக பணியாற்றினார். மேலும் ஜூலை 25, 2017 அன்று குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் முதல் குடிமகன் எனும் அந்தஸ்த்தைப் பெற்றார்.

“ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கொள்கை விஷயங்களைப் பற்றிய அவரது சிறந்த நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனமான புரிதல் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகுந்த இரக்கமுள்ளவர். அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று மோடி தனது பிறந்த நாள் வாழ்த்து டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

இதே போல் துணைக்குடியரசுத் தலைவர் உள்ளிட்ட இதர தலைவர்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

Views: - 9

0

0