ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்… யூனிபார்மில் ஒரே கொஞ்சல் : ஏட்டய்யாவின் லீலை… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 3:58 pm
UP Police -Updatenews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் ஸ்டேஷனில், தீப் சிங் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். அந்த ஸ்டேஷனுக்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.

அவர் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.. அந்த பெண் எதற்காக ஸ்டேஷனுக்கு வந்தார் என்று தெரியவில்லை.. அந்த பெண்ணை கட்டிபிடித்து கொஞ்சி உள்ளார் ஏட்டு.

ஸ்டேஷனிலேயே கட்டில், தலைகாணி எல்லாம் இருக்கிறது.. அந்த கட்டிலில்தான் ஏட்டைய்யா உட்கார்ந்து கொண்டு, இவ்வளவு சேட்டைகளையும் செய்துள்ளார்.. அதுவும் யூனிபார்மிலேயே இந்த அக்கிரமத்தை செய்துள்ளர்.

இந்த சம்பவம் 2 வருடத்துக்கு முன்பு நடந்ததாக சொல்கிறார்கள்.. ஆனால், இந்த வீடியோ இப்போதுதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, இந்த ஏட்டுவும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, பாங்கர்மாவ் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு தீப் சிங், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன் கோட்வாலி ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதையடுத்து உன்னாவ் எஸ்பி உத்தரவின் பேரில் ஏட்டு தீப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அந்த பெண்ணிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

Views: - 247

0

0