சட்டசபைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி..! உ.பி.யில் பரபரப்பு..!

4 March 2021, 7:30 pm
uttar_pradesh_vidhan_sabha_firing_updatenews360
Quick Share

உத்தரபிரதேச போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று மாநில சட்டமன்றத்திற்கு வெளியே உள்ள கேட் எண் 7’இன் பார்க்கிங் பகுதிக்கு அருகே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு தனக்கு வழங்கியிருந்த துப்பாக்கியை பயன்படுத்து சப்-இன்ஸ்பெக்டர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு தற்கொலைக் குறிப்பின் படி, அவர் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக் குறிப்பில், காவல்துறை அதிகாரி தற்கொலை முடிவை எடுத்ததற்காக, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரபிரதேச சட்டசபைக்கு வெளியே கடும் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.

தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி சின்ஹாட் பகுதியில் வசிக்கும் நிர்மல் சவுபே என அடையாளம் காணப்பட்டுள்ளார். நிர்மல் சவுபே லக்னோவின் பண்டேரா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Views: - 2

0

0