திருப்பதி கோவிலுக்கு அரசியல் பிரபலங்கள் வருகை : புதுச்சேரி சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சர் வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2021, 11:25 am
Pondy Minister in Tirupati -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதுச்சேரி சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி சபாநாயகர் ஆறுமுகம் உள்துறை அமைச்சர் சதாசிவம் ஆகியோர் இன்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.

நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்து அவர்கள் திருப்பதி மலையில் இரவு தங்கி இன்று காலை விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

சாமி தரிசனம் முடிந்த பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கினர்.

Views: - 225

0

0