5 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசியல் தலைவர்கள் : சோனியா காந்தியுடன், லாலு – நிதிஷ்குமார் சந்திப்பு.. அரசியலில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 8:19 pm
Sonia Lalu Nitish - Updatenews360
Quick Share

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இன்று சந்தித்து பேசினார்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு சோனியா காந்தியை நிதிஷ் குமார் முதல் முறையாக சந்தித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

இந்த சூழலில் சோனியா காந்தியை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சோனியா காந்தியை சந்தித்த பிறகு நிதிஷ் குமாரும் – லாலு பிரசாத் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நிதிஷ் குமார் கூறியதாவது: நாட்டை முன்னெடுத்து செல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Views: - 265

0

0