கூலியாட்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் செம்மறி ஆடு வைத்து களை எடுத்த ஏழை விவசாயி : வைரல் வீடியோ!!

19 July 2021, 9:41 pm
Goat Using- Updatenews360
Quick Share

ஆந்திரா : பருத்தி கொல்லையில் கூலியாட்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் செம்மறி ஆட்டை பயன்படுத்தி களை எடுத்த ஏழை விவசாயியை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வெங்கடகிரி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சன். ஏழை விவசாயியான இவர் 1 ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். பருத்தி கொல்லையில் களை அதிகரித்த நிலையில் அவற்றை எடுக்க கூலியாட்களுக்கு 7000 ரூபாய் வரை வழங்க வேண்டியிருக்கும்.

ஆனால் ரஞ்சன் மிகவும் ஏழ்மையானவர் என்பதால் கூலியாட்களுக்கு பணம் கொடுக்க வசதியின்றி இருந்த நிலையில், மனைவி ஜெய்னாபி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செம்மறி ஆட்டை கொண்டு பருத்தி கொல்லையில் களை எடுக்கப்பட்டது. செம்மறி கெடாரிக்கு சிறிய அளவிலான கலப்பை ஒன்று கட்டப்பட்டு ஆட்டிற்கு முன்பக்கமாக ரஞ்சனின் மகள் புற்களை நீட்ட அது புற்களை சாப்பிட முன்னேறி செல்லும்போது களையை எடுத்துள்ளனர்.

ஒரு ஏக்கர் நிலத்தை செம்மறி ஆட்டைக்கொண்டு உழுது களை எடுத்தது அப்பகுதி மக்களை வியப்படைய வைத்துள்ளது.

Views: - 122

0

0