திரௌபதியாக கங்கனா..! துச்சாதனனாக உத்தவ் தாக்கரே..! கிருஷ்ணராக மோடி..! வாரணாசியைக் கலக்கும் போஸ்டர்..!

10 September 2020, 6:47 pm
kangana_ranaut_posters_updatenews360
Quick Share

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தை இந்து புராணமான மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான திரௌபதியாக சித்தரிக்கும் சுவரொட்டிகள் இன்று உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் வைக்கப்பட்டன.

சுவரொட்டிகளில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கனாவின் சேலையை உறுவும் துச்சாதனனாக காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகவான் கிருஷ்ணராக சித்தரிக்கப்பட்டு, நடிகை கங்கனா ரனவத்தை பாதுகாக்கிறார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்ட தனது கருத்து தொடர்பாக கங்கனா ரனவத் சிவசேனாவுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பின்னர் மும்பையில் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்றும் மும்பை காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும் நடிகை கங்கனா ரனவத் கூறியுள்ளார்.

சிவசேனா தலைமையிலான மும்பை மாநகராட்சி நேற்று கங்கனாவின் பங்களாவில் உள்ள சட்டவிரோத பகுதிகளை இடித்தது. அதைத் தொடர்ந்து வெளிப்படையாக நடிகை உத்தவ் தாக்கரேவை சாடினார்.

ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டு அவர்,  “‘உத்தவ் தாக்கரே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நேர சக்கரம். இதை நினைவில் கொள்ளுங்கள், அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் கங்கானாவை திரௌபதியாக சித்தரித்து இந்த சுவரொட்டிகளை வாரணாசியில் உள்ள உள்ளூர் வழக்கறிஞர் ஸ்ரீபதி மிஸ்ரா வெளியிட்டார். சுவரொட்டிகளை நியாயப்படுத்திய மிஸ்ரா, சிவசேனாவுடன் கங்கனாவுக்கு ஏற்பட்டுள்ள மோதலில், மகாராஷ்டிரா அரசு கௌரவர்களின் சேனைகள் போல செயல்படுகிறது என்று கூறினார்.

பிரதமர் மோடியால் மட்டுமே இந்த நாட்டில் பெண்களின் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என்று மிஸ்ரா கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது, முழு பிரச்சினையிலும் மௌனமாக இருப்பதற்காக அவர் விமர்சித்துள்ளார்.

Views: - 8

0

0