சிவில் சர்வீஸ் 2021 முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு..!!

21 June 2021, 2:27 pm
Quick Share

கொரோனா தொற்று பரவல் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணி தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வுகளை இந்தியா முழுவதும் 10 லட்சம் பேர் வரை எழுதுவர்.

upsc - updatenews360

இந்தத் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அதே ஆண்டு மே 31ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 2020க்கான முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக அக்டோபர் 4ம் தேதி அன்று நடந்தது. இதேபோன்று 2021ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 27ம் தேதி அன்று நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கொரோனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Views: - 181

0

0