மின்தடையால் விபரீதம்… ஒரே மேடையில் நடந்த இரு திருமண நிகழ்ச்சியில் குழப்பம்.. வீடு திரும்பிய மணமகன்களுக்கு ஷாக்…!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 2:24 pm
Quick Share

மின்வெட்டு காரணமாக மணப்பெண்களை மாற்றி மணமகன்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மின்தடையால் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தந்தை ரமேஷ், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரு மணமகன்களை தனது மகள்களுக்கு வரன் பார்த்துள்ளார்.

அதன்படி, இரு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது, அக்னியை சுற்றி வலம் வந்த மணமகள்கள் இருவரும் இடம் மாறி மாறி அமர்ந்தனர். இருவரும் தலைக்கு முக்காடு போட்டிருந்ததாலும், ஒரே மாதிரியான ஆடை அணிந்திருந்ததாலும் மாப்பிள்ளைகளுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அடையாளம் தெரியவில்லை.

திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்ற பிறகுதான் தாங்கள் போட்டிருந்த முக்காடை அகற்றினர். அப்போது, மணப்பெண் மாறியிருப்பதை கண்டு இரு மணமகன் வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணமகன் குடும்பத்தினர் சண்டை போட்ட பிறகு, திருமணம் நடத்தி வைத்த புரோகிதரிடம் முறையிட்டனர்.

Spiritual information Of marriage ceremony | திருமணத்தின் போது அக்னியை  சுற்றி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா? | Culture News in Tamil

பின்னர், அவரது அறிவுறுத்தலின் பேரில், மீண்டும் சடங்கு செய்து, தங்களது மனைவியை மீண்டும் அவரவர் கணவர்கள் கரம் பிடித்தனர். மின்தடையால் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 847

0

0