ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : குலுங்கிய வீடுகள்.. அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 10:59 am
J7K Earthquake- Updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது.

காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக காஷ்மீரில் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த பொருட்கள் குலுங்கின. காஷ்மீரில் நிலநடுக்கம் சற்று அதிகமாவும் வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஆப்கானிஸ்தான் -தஜிகிஜிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் டெல்லி-என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது.நிலநடுக்கம் குறித்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிலர் குறைந்தது 20 வினாடிகள் நிலம் அதிர்ந்ததாக ட்வீட் செய்துள்ளனர்.

Views: - 940

0

0