“என் தந்தை விரைவில் குணமடைய அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்” – பிரணாப் முகர்ஜியின் மகன் வேண்டுகோள்

13 August 2020, 9:01 am
Quick Share

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என, ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவர் மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து 4-வது நாளாக கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை டெல்லி ராணுவ ஆராய்சி மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி உங்கள் பிரார்த்தனையின் காரணமாக எனது தந்தையின் ரத்த ஓட்டம் இப்போது சீரடைந்துள்ளது. என் தந்தையின் உடல்நிலை விரைவாக குணமடைய தொடர்ந்து இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள், நன்றஇ என தெரிவித்துள்ளார்.