“ஒரு ரூபாய் அபராதம் ஏற்றுக்கொள்ள முடியாது”..! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்த பிரஷாந்த் பூஷண்..!

Author: Sekar
1 October 2020, 3:10 pm
prashant_bhushan_updatenews360
Quick Share

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், பூஷண் ஏற்கனவே ரூ 1 அபராதம் செலுத்தியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்க்க முடிவு செய்துள்ளார். அபராதத்தை செலுத்தும் போது, பதிவேட்டில் அபராதம் செலுத்துவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல என்று பூஷண் தெளிவுபடுத்தியிருந்தார்.

அவரது ட்வீட் தொடர்பாக சூ மோட்டோ முறையில் நீதிமன்றம் நடத்திய அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக கடந்த செப்டம்பர் 14’ஆம் தேதி அவருக்கு ரூ 1 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பூஷண், இன்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்யுமாறு கோரி அவர் மேல் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஜூன் 29 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், இந்திய தலைமை நீதிபதி போப்டே ஒரு உயர்தர பைக்கில் செல்லும் படம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்திருந்தார். தனது இரண்டாவது ட்வீட்டில், பூஷண் நாட்டின் விவகாரங்களுக்கு மத்தியில் கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் பங்கு குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், 2009’ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலுக்காக பூஷனுக்கு எதிரான மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதில் அவர் 16 முன்னாள் தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல் மிக்கவர்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 51

0

0