ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 24ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை…!!

19 November 2020, 7:36 am
Quick Share

திருப்பதி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அன்று அவர் புதுடெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் அவரை ஆந்திர மாநில கவர்னர் பிஷ்வபுஷன் ஹரிச்சந்தன் மற்றும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்கின்றனர்.

Tirupathi temple updatenews360

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாலை மார்க்கமாக திருமலையை பகல் 11.40 மணியளவில் சென்றடைகிறார். திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார்.

அங்கு குடியரசுத் தலைவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்து செல்கின்றனர். பகல் 12.40 மணியளவில் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். பின்னர் பிற்பகல் 1.50 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குத் திரும்புகிறார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாக 3.15 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் அகமதாபாத் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.