2 நாள் அரசுமுறை பயணம்: நாளை மத்தியப் பிரதேசம் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்..!!
5 March 2021, 5:29 pmபோபால்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 6ம் தேதி 2 நாள் அரசுமுறை பயணமாக மத்தியப் பிரதேசம் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் 6ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு ஜாபல்பூர், தாமோ மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மார்ச் 6ம் தேதி தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளார். மார்ச் 6ம் தேதி ஜாபல்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
மார்ச் 7ம் தேதி தாமோ மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் தொடர்ந்து நிகழ்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0