ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை திருப்பதி வருகை

23 November 2020, 11:30 pm
Quick Share

திருப்பதி: ஒரு நாள் சுற்றுப்பயணமாக நாளை காலை திருப்பதிக்கு வர இருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மதியம் ஏழுமலையானை வழிபட்டு மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

சாமி தரிசனத்துக்காக டில்லியிலிருந்து நாளை காலை 10.30 மணிக்கு ரேனிகுண்டா விமான நிலையம் வந்து சேரும் ஜனாதிபதியை ஆந்திர ஆளுநர் பிஷ்வபூசன் ஹரிசந்தன், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்க உள்ளனர்.தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,ஆந்திர ஆளுநர் பிஷ்வபூசன் ஹரிசந்தன் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சானூருக்கு சென்று பத்மாவதி தாயாரையும், அதனை தொடர்ந்து திருப்பதி மலைக்கு சென்று சற்று நேர ஓய்வுக்குப் பின் மதியம் மணி 12. 40க்கு ஏழுமலையானையும் வழிபட உள்ளனர்.சாமி தரிசனத்திற்கு பின் நாளை மாலை ஜனாதிபதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் அவர் பயணம் செய்ய இருக்கும் வழிகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஜனாதிபதி சுற்றுப்பயணத்தின் போது பணி நிமித்தமாக அவருடன் நெருங்கி செல்லக்கூடிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வரவேற்று உபசரிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து முடித்துள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை வரை போலீசார் கான்வாய் பரிசோதனை நடத்தினர்.

Views: - 0

0

0