சட்டவிரோத சுரங்கத்தை எதிர்த்த சாமியார் மர்ம மரணம்..! கொதித்தெழுந்த மக்கள்..!

18 October 2020, 5:13 pm
UP_Priest_Dead_Updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்த ஒரு சாமியார் நேற்று பிற்பகல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மொராதாபாத்தில் உள்ள அசலத்புரா பகுதியில் உள்ள கோவிலில் சாமியாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதி கால்ஷாஹீத் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது.

மொராதாபாத் காவல்துறையினர் இதில் சதேகத்திற்கிடமான விசயம் எதுவும் எல்லை என்று கூறியதோடு, பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னர் அவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறியுள்ளனர். சாமியார் ராம்தாஸ் ஜி மகாராஜ் என அடையாளம் காணப்பட்டார்.

மொராதாபாத் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்ரி, சாமியார் இயற்கை மரணம் அடைந்ததாகவும், அவரது உடலில் எந்த காயமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராம்தாஸ் ஜி மகாராஜ் ராம்கங்கா மாசு கட்டுப்பாட்டு குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் அப்பகுதியில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மேலும் சேவ் ராம்கங்கா மிஷனுடன் ஒருங்கிணைந்து பணியாற்றினார் மற்றும் ராம்கங்கா ஆற்றங்கரையில் சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சாமியாரின் மரணம் குறித்த தகவல் வெளிவந்த பின்னர், பல உள்ளூர் வாசிகள் நேற்று பிற்பகல் அப்பகுதியில் கூடி மொராதாபாத்-ஹரித்வார் நெடுஞ்சாலையைத் தடுத்தனர். போராட்டத்தின் போது காவல்துறையினர் தலையிட்டு ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்தி, அப்பகுதியில் போக்குவரத்தை மீட்டெடுத்தனர்.

பிரபாகர் சவுத்ரி மேலும், “சாமியாரின் மர்மமான மரணத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஏராளமான மக்கள் ஒன்று கூடினர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.”

Leave a Reply