சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்..! நிர்வாணமாக படம் பிடித்து கிறிஸ்துவ மதம் மாற வற்புறுத்திய பாதிரியார்..!

2 September 2020, 10:12 am
amraivadi_priest_updatenews360
Quick Share

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அமிரைவாடி பகுதியில் ஒரு பாதிரியார் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குஜராத்தி நாளேடான டைனிக் பாஸ்கர் இது தொடர்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், ரபரி காலனியில் வசித்து வந்த மைனர் பெண்ணை பாதிரியார் அன்பாக இருப்பது போல் பாசாங்கு செய்து இந்த கொடிய செயலை மேற்கொண்டார் எனத் தெரிவித்துள்ளது. சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி, நிர்வாண வீடியோ எடுத்துக் கொண்டார் என்றும் பின்னர் சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

அறிக்கையின்படி, பாதிரியார் இந்த வீடியோவை மைனர் பெண்ணின் மாமாவுக்கு அனுப்பினார் எனக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அதை அறிந்ததும், அவர்கள் காவல் நிலையத்தை அணுகி, பாதிரியார் குலாப்சந்த் மீது புகார் அளித்தனர்.

11’ஆம் வகுப்பு சிறுமியை அச்சுறுத்திய பாதிரியார் :
அந்த அறிக்கையின்படி, 11 ஆம் வகுப்பில் படிக்கும் சிறுமியை பாதிரியார் அச்சுறுத்தியுள்ளார். சிறுமி தனது இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தேவாலயத்தை 2019 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது அண்டை வீட்டாரோடு பார்வையிட்டார். அப்போது பாதிரியார் சிறுமியுடன் பேசினார். பெற்றோரை தேவாலயத்திற்கு அழைத்து வரும்படி கேட்டார்.

இருப்பினும், அவர் தனது பெற்றோருடன் இதைப் பற்றி விவாதிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, பாதிரியாரின் மருமகன் சிறுமியின் பெற்றோரை அழைத்து அவர்களை தேவாலயத்திற்கு அழைத்தார். ஒரு மாதம் கழித்து, சிறுமி தனது பெற்றோருடன் மீண்டும் தேவாலயத்திற்குச் சென்றார். பின்னர், பாதிரியார் குலாப்சந்தும் அவரது மருமகனும் மைனரின் வீட்டில் டிரம்ஸுடன் பிரார்த்தனையை நடத்தியுள்ளனர்.

பாதிரியார் குலாப்சந்த் மேற்கொண்ட வீடியோ அழைப்புகள் :
பாதிரியார் மைனரை அவரது தந்தையின் தொலைபேசியில் அழைத்து அதில் சிறுமியை முத்தமிடும் ஒரு படத்தை அனுப்பியதாகவும், ‘ஐ லவ் யூ’ என்று கூட சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியை காதலிப்பதாக நடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுமி தனியாக இருக்கும் போதெல்லாம், வீடியோ அழைப்பில் சிறுமியை நிர்வாணமாக இருக்கும்படி மிரட்டியும், ஒப்புக் கொள்ளாவிட்டால் சிறுமியின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை :
ஒரு வாரம் முன்பு, பாதிரியார் சிறுமியின் வீடியோக்களை அவரது மாமாவுக்கு அனுப்பினார். இதன் மூலம் தான் சிறுமியின் தந்தை எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டுள்ளார். 2-3 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தனது நிர்வாண படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. போலீசார் புகார் பதிவு செய்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Views: - 14

0

0