இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி: 16வது ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்..!!
Author: Aarthi Sivakumar29 October 2021, 9:14 am
புதுடெல்லி: இத்தாலியில் நடைபெற உள்ள 16வது ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு, வருகிற 1 மற்றும் 2ம் தேதிகளில் நடக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானத்தில் இத்தாலி புறப்பட்டார். ரோம் செல்லும் வழியில் வாடிகன் நகரில் போப் ஆண்டவரான போப் பிரான்சிசை நாளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் கொரோனா கால பாதிப்புகள், கொரோனா ஊரடங்குகளால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
0
0