பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!

19 November 2020, 8:15 am
modi thanks - updatenews360
Quick Share

பெங்களூரு: 23வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

23வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

23வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு-கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதில் ஆஸ்திரேலிய பிரதமர், சுவிட்சர்லாந்து துணை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் முதலமைச்சர் எடியூரப்பா, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

இதற்கு முன்பு நடைபெற்ற 22 தொழில்நுட்ப மாநாடுகளில் அனைவரும் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கண்காட்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகின்றன. 100க்கும் அதிகமான புதிய தொழில்கள், சுமார் 4,000 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இக்கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைத்து வெளிப்படுத்துகின்றன. இந்த கண்காட்சியின்போது, பிற நாடுகளுடன் கர்நாடகம் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.