குஜராத்தின் ஹசிரா – கோகா இடையே படகுப் போக்குவரத்து: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!

7 November 2020, 5:37 pm
gurajt ship - updatenrews360
Quick Share

குஜராத்தின் ஹசிரா – கோகா இடையேயான படகுப் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஹசிரா-கோகா இடையே சாலை வழியாக 370 கிலோமீட்டர் தொலைவுக்கு செல்ல 12 மணி நேரமும், ரயிலில் 527 கிலோமீட்டர் தொலைவுக்கு செல்ல 9 மணி நேரமும் ஆகிறது. ஆனால் கடல் வழியே 90 கிலோமீட்டர் தூரம் செல்ல 4 மணி நேரமே ஆகும்.

இரு நகரங்கள் இடையே இயக்கப்படும் வாயேஜ் சிம்பனி படகில் ஒவ்வொன்றும் 50 டன் எடை கொண்ட 30 லாரிகள், 100 கார்கள் ஆகியவற்றுடன், 500 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வழிப் போக்குவரத்தின் மூலம் சாலைகளில் வாகன நெரிசல் குறைவதுடன், காற்று மாசுபடுவதும், சாலை விபத்துக்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 19

0

0