பிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்கத்திற்கு பயணம்: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…!!

6 February 2021, 10:04 am
modi speech - updatenews360
Quick Share

புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை செல்கிறார். காலை 11.45 மணிக்கு இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கான ‘அசாம் மாலா’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

அசாமில் சோனிட்பூர் மாவட்டம் தேக்கியாஜுலியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு மாலை சுமார் 4.50 மணிக்கு, மேற்குவங்கம் ஹால்டியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அசாம் மாநில முதலமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதனை தொடர்ந்து மேற்கு வங்காளத்திற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மாலை சுமார் 4.50 மணிக்கு, மேற்குவங்கம் ஹால்டியாவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள எல்.பி.ஜி. இறக்குமதி முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மேற்குவங்க மாநில ஆளுநர், முதலமைச்சர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மத்திய அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சுமார் ரூ.1100 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு எல்.பி.ஜி. கையாளும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0