பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினம் : சமூக நல விழிப்புணர்வுக்கு பாஜக அழைப்பு..!

7 September 2020, 11:27 am
Quick Share

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி ரத்த தானம் உள்ளிட்ட சமூக நல பணிகளை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அன்று சொந்த மாநிலமான குஜராத் சென்று தனது தாயாரிடம் பிரதமர் மோடி ஆசீர் பெற்று வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளை கடந்து 70வது ஆண்டில் அடியேடுத்து வைக்கும் இந்த பிறந்த நாளை பாஜகவினர் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொண்டாட்டங்களின்போது, பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரசாரம், துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை வினியோகித்தல், ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், மூக்கு கண்ணாடிகள் வழங்கும் முகாம், பிளாஸ்மா தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இந்த முயற்சியை பாஜகவினர் முன்னெடுக்கவுள்ளனர். அதே சமயம் வருகிற 14ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0