தேசிய ஆசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 8:45 am
Modi - Updatenews360
Quick Share

தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது.

இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக விறுவிறுப்பாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்கில் தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.

Views: - 202

0

0