புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 12:40 pm
Quick Share

புதுடெல்லி: 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது என மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

81வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது.

100 கோடி தடுப்பூசிக்கு பின் எண்ணற்றோரின் தன்னலமற்ற உழைப்பு உள்ளடங்கி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும் என தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31 தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு செயலிலாவது நாம் ஈடுபட வேண்டும். அடுத்த மாதம், பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை இந்தியா கொண்டாட உள்ளதாக கூறியுள்ளார்.

Views: - 477

0

0