பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர் – பிரதமர் மோடி ட்வீட்..!!

11 November 2020, 8:48 am
modi thanks - updatenews360
Quick Share

புதுடெல்லி: ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை உருவாக்கிய பீகாா் சட்டப் பேரவைத் தோதலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மெகா கூட்டணி 113 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி அம்மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது. பாஜக கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Views: - 23

0

0