‘உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்’: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

Author: Aarthi Sivakumar
14 January 2022, 10:03 am
Quick Share

புதுடெல்லி: உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளால் தைப்பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Views: - 168

0

0