மேற்கு வங்க மக்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி உரை…!!

22 October 2020, 1:59 pm
pm modi - updatenews360
Quick Share

மேற்கு வங்காள மக்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

மேற்கு வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு பெங்காலி மொழியில் உரையாற்றினார். அப்போது, துர்கா பூஜை இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விழாக்காலங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் சுமார் 30 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் 90 லட்சத்திற்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக்காக சுயநலமின்றி உழைத்தனர். இந்தியாவின் வளர்ச்சியில் மேற்கு வங்காள மக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Views: - 32

0

0