ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகையுடன் மரியாதை செலுத்திய பிரதமர்..!!

26 January 2021, 11:44 am
pm on respect - updatenews360
Quick Share

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, குஜராத்தின் ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகை அணிந்து வந்தார்.

நாட்டின் 72வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச்சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து மூவர்ண கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார். பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். வங்கதேச முப்படைகளில் இருந்து 122 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசாக அளித்த தலைப்பாகையுடன் பிரதமர் பங்கேற்றார். அதே தலைப்பாகையுடன், போர் நினைவிடத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Views: - 3

0

0