பிரதமர் மோடியின் பிறந்தநாள் பரிசு.. ஒரே நாளில் 2 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 6:21 pm
2 Crore Vaccine - Updatenews360
Quick Share

இந்தியாவில் இன்று மட்டும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2 கோடிக்கு பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே அதிகபட்சம் என்பதாகும்.

இன்று பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.

ஒரே நாளில் அதிக தடுப்பூசி சாதனை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு கோடியே 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 2 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 77 கோடிக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 155

0

0