பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக்… அதிகாரிகள் ஷாக் : பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 8:54 am
twitter Hacked- Updatenews360
Quick Share

பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல். நேபாள பிரதமருக்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. பிஎம் நேபாளம் என்ற பெயரில் உள்ள அந்த டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

நேபாள பிரதமரின் டுவிட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டு டுவிட்டர் முகப்பு புகைப்படம் மற்றும் முகப்பு முன்னுரை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

முகப்பு பக்கத்தில் புரோபைல் புகைப்படமாக புஷ்ப கமல் தாஹல் புகைப்படம் இருந்த நிலையில் அது ஹேக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹேக் பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 118

0

0