அணு ஆயுத திறன் கொண்ட பிருத்வி 2 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி..! டிஆர்டிஓ அதிரடி..!

Author: Sekar
16 October 2020, 8:53 pm
Missile_DRDO_UpdateNews360
Quick Share

ஒடிசா கடற்கரையில் உள்ள வழக்கமான சோதனை தளத்தில் இந்தியா தனது அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணையின் மற்றொரு இரவு நேர சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இன்று மாலை நடந்த இந்த சோதனை மூலோபாய படை கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திரவ எரிபொருளால் இயக்கப்படும் பிருத்வி -2, 250 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் மற்றும் 1 டன் அளவிலான குண்டுகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிஆர்டிஓ உருவாக்கிய முதல் 9 மீட்டர் உயரமான ஏவுகணை இதுவாகும். இது இந்தியாவின் முதல் உள்நாட்டு சாம் ரக மூலோபாய ஏவுகணை ஆகும்.

ஏவுகணைகளின் பாதை வெவ்வேறு இடங்களில் நீண்ட தூர, பல செயல்பாட்டு ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிக் டெலிமெட்ரி நிலையங்களின் பேட்டரி மூலம் கண்காணிக்கப்பட்டது.

இது மூன்று வாரங்களுக்குள் பிருத்வி -2’இன் இரண்டாவது இரவு நேர சோதனையாகும். செப்டம்பர் 27 அன்று டிஆர்டிஓ அமைதியாக அணுசக்தி ஏவுகணையின் மற்றொரு சுற்று இரவு சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சாம் ரக விமான சோதனை 40 நாட்களில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 11’வது ஏவுகணை சோதனை ஆகும். கடைசியாக நடத்திய நிர்பயா ஏவுகணையின் சோதனையைத் தவிர மற்ற அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும், ஆயுதப் படைகளின் மூலோபாயப் படை கட்டளை பயிற்சியின் ஒரு பகுதியாக டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் இரவு நேர சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 215

0

0