அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து : 10 பேர் உடல் நசுங்கி பலி..25 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 3:49 pm
Private Bus Upset -Updatenews360
Quick Share

ஆந்திரா கர்நாடக எல்லையில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று பாவகட்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் அதிக அளவில் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

தும்கூர் மாவட்டத்தில் உள்ள பலவலஹள்ளி அருகே அந்த பேருந்து சாலையில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் உடல் நசுங்கி மரணமடைந்தனர்.மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Views: - 665

0

0