லக்னோ சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது

Author: Udhayakumar Raman
20 October 2021, 9:06 pm
Quick Share

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அருண் வால்மிகி என்ற இளைஞர் அங்கு உள்ள ஜகதீஸ்புரா காவல்நிலையத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக நேற்று புகார் வைக்கப்பட்டது. தூய்மை பணியாளரான இவர் கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையை சுத்தம் செய்யும் போது அங்கு இருந்து பணத்தை திருடியதாக புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அருண் வால்மிகியிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை போலீசார் இன்று மீட்டனர். இன்று அதிகாலை உடல்நிலை மோசமான காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் வால்மிகி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உடலில் மோசமான காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் இவரை தாக்கியதில் பலியாகி இருக்கலாம், இது கஸ்டடி மரணம் என்று போலீசார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அருண் வால்மிகியிடம் இருந்து15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அருண் வால்மிகிக்கு நீதி வேண்டி அவரின் உறவினர்கள் ஆக்ரா அருகே ஜகதீஸ்புரா பகுதியில் போராடி வருகிறார்கள். அங்கு இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் ஆக்ராவில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்து மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார். இங்கு கூட்டம் கூட கூடாது, அரசியல்வாதிகள் வர கூடாது, மக்கள் போராட்டம் நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,காவல்நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை காண ஆக்ரா சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா பிரியங்கா காந்தியை ஆக்ரா காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் பிரியங்கா காந்தி வாக்கு வாதம் செய்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி செல்ல அனுமதிக்க முடியாது எனவும், அவரை தடுப்புக் காவலில் வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”அருண் வால்மீகி போலீஸ் காவலில் இறந்தார். அவருடைய குடும்பம் நீதி கோருகிறது. நான் அந்த குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன். உ.பி அரசு எதற்கு பயப்படுகிறது? நான் ஏன் தடுக்கப்படுகிறேன்?.இன்று வால்மீகி ஜெயந்தி,பிரதமர் மோடி புத்தரை பற்றியெல்லாம் பெரிதாக பேசினார் ஆனால் இது அவர் பேசியதை தாக்குகிறது “என்று ட்வீட் செய்தார்.
இதற்கு முன்னதாக,லக்கிம்பூர் கேரி வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி,கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 208

0

0