மேகாலயா பா.ஜனதா துணைத் தலைவர் பெர்னார்ட் என். மரக்.மரக், கேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார்.
இவருக்கு மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தபடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மரக்கின் பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்து 23 பெண்கள், 73 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து ஐந்து சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். பண்ணை வீட்டில் போலீஸ் சோதனை நடந்தநிலையில் மரக் தலைமறைவாகி விட்டார்.
அந்த பண்ணை வீட்டில் இருந்து 400 மதுபான பாட்டில்கள் மற்றும் 500 ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ‘ரிம்பு பாகன்’ என்ற மரக்கின் பண்ணை வீட்டில் டஜன் கணக்கான கார்கள் இருந்தன.
பண்ணை வீட்டில் விபாசார விடுதி நடத்தியதாக போலீசார் மரக்கை உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் கைது செய்தனர். கைதாகியுள்ள பெர்னார்ட் மரக் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் மீது வட கிழக்கு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் 25க்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த சம்பவத்திற்கு மாநில பா.ஜ.க கட்சி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மூன்று மாடி கட்டடத்தில் கீழ்தளம் நிகழ்ச்சிகளை நடத்தவும் முதல் தளத்தில் உள்ள 30 அறைகள் குடியிருப்புவாசிகள் வசிக்கவும், இரண்டாம் தளத்தில் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததாக பா.ஜனதா அறிக்கையில் கூறி உள்ளது.
கொரோனா காலத்தில் இருந்தே அந்த விடுதியில் சிறார்கள் உள்பட இளைஞர்கள் தங்கி வந்ததாகவும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வந்தவர் பெர்னார்ட் மரக் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.