மனித தலையை அடுப்பில் சுட வைத்து சாப்பிட்ட சைக்கோ இளைஞர்.!

17 August 2020, 5:40 pm
Andhra Psycho - Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த சைக்கோ இளைஞர் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரெல்லி வீதி எப்பொழுதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக அனைவரும் முகத்தில் முக கவசம் அணிந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் சுப்ரமணியம் என்பவர் வீட்டின் அருகே உள்ள சந்தில் ஒரு கோனி பை இருப்பதை பார்த்த சிலர் அதனை திறந்து பார்த்த போது அதில் மனித தலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த படி அந்த பையை பார்த்து கொண்டுருந்தபோது அவரது வீட்டின் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் வசித்து வரும் ராஜு என்ற இளைஞர் அந்த பையை எடுத்து செல்வதை பார்த்தார்.

சிறிது நேரம் கழித்து ராஜு வீட்டின் ஜன்னல் வழியாக சுப்ரமணியம் பார்த்த போது மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜுவும் அவனுடன் இருந்த ஒரு பெண்னும் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

முதலாவது நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜுவையும் அவரது வீட்டில் இருந்த அந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ராஜுவின் தந்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதன்பிறகு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ராஜு ஈடுபட்டு வந்ததால் மகனின் நடவடிக்கை பிடிக்காத அவரது தாயார் எலமாச்சி அவனை விட்டு விலகி பழக்கடை வைத்து வேறு இடத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜீவ் சைக்கோ போன்று அவ்வப்பொழுது மயானத்திற்கு சென்று வருவதும் போதையுடன் சுற்றுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ராஜீவுடன் வீட்டில் இருந்த அந்த பெண் யார், எதற்காக ராஜுவுடன் தங்கியிருந்தார், அவர்களிடமிருந்த மனித தலை மயானத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா அல்லது வேறு யாரையாவது கொலை செய்து கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 35

0

0