PUBG’க்கு மாற்றாக FAU-G வீடியோ கேம்..! ஆத்மநிர்பர் பாரத்தின் கீழ் களமிறக்கும் அக்‌ஷய் குமார்..!

4 September 2020, 5:47 pm
Akshay_Kumar_FAU-G_UpdateNews360
Quick Share

அக்‌ஷய் குமார், இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், தடை செய்யப்பட்ட பப்ஜிக்கு மாற்றாக வரவிருக்கும் மல்டிபிளேயர் வீடியோ கேம் செயலியான FAU-G”ஐ அறிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமாரால் வெளியிடப்படும் அதிரடி-மல்டிபிளேயர் விளையாட்டு, இளைஞர்களுக்கு நமது வீரர்களின் தியாகங்கள் குறித்தும் சொல்லும் வகையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து கொண்ட அக்‌ஷய் குமார், “பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், ஒரு மல்டிபிளேயர் அதிரடி விளையாட்டை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

அச்சமற்ற மற்றும் யுனைடெட் காவலர்கள் எனப்படும் FAU-G வீடியோ கேம் பொழுதுபோக்கு தவிர, நம் வீரர்களின் தியாகங்களைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள். நிகர வருவாயில் 20% பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இது அவரின் முதல் கேமிங் முயற்சியாகும்.

கடந்த செப்டம்பர் 2’ம் தேதி, டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் பப்ஜி மொபைல் செயலியை, மேலும் 117 செயலிகளுடன் அரசாங்கம் தடை செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான மொபைல் விளையாட்டின் தடை பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், பப்ஜியின் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் இந்தியாவில் இன்னும் கிடைக்கின்றன.

அக்‌ஷய் குமார் சமூக ஊடகங்களில் FAU-G’ஐ அறிவித்தவுடன், நெட்டிசன்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிலர் உற்சாகமாக, FAU-G’ஐ PUBG’க்கு மாற்றாக அழைக்கிறார்கள். மற்றவர்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப்பிற்கு விளையாட்டு கிடைக்குமா என்று அறிய ஆர்வமாக உள்ளனர்.

அதே சமயம் சிலர் எதிர்வினையாகவும் கருத்து தெரிவித்தாலும் பப்ஜிக்கு மாற்றாக இது இருக்குமா என பப்ஜி ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.

Views: - 0

0

0