சட்டசபை தேர்தல்: கேரளாவில் ஏப்.6ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
26 March 2021, 8:55 am
kerala election - updatenews360
Quick Share

பெரும்பாவூர்: சட்டமன்ற தேர்தலையொட்டி கேரளாவில் வருகிற 6ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் 6ம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கேரளா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களின் அன்றைய தினம் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் மாவட்டத்தின் வெளியே வேலை செய்துவரும் வெளிமாநில ஊழியர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பதை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 157

0

0