பஞ்சாபில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை..!
4 January 2021, 11:51 amசனிக்கிழமை மாலை காணாமல் போன ஆறு வயது சிறுமி, பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் ஜலந்தர்-ஹோஷியார்பூர் சாலையில் அமைந்துள்ள ஹசாரா கிராமத்தில் உள்ள கரும்பு வயலில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டது.
பலியான சிறுமியின் பெற்றோர், பீகாரைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஞ்சாபின் ஜலந்தரில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். அவர்கள் வேலையில் இருந்து திரும்பியபோது சிறுமி காணாமல் போனதால் போலீசில் புகார் அளித்தனர்.
அவர்களது வீட்டின் அருகே தங்கி வேலைபார்த்து வரும், சிறுமியின் குடும்பத்தின் உறவினர் சந்தோஷ், பிஸ்கட் பெறுவதற்காக சிறுமியை சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் சிறுமியை வீட்டிலேயே விட்டுவிட்டதாகவும் கூறினார்.
சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள பகுதிகளில் அவரைத் தேடத் தொடங்கியபோது, சந்தோஷ் தலைமறைவாகிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், சந்தோஷ் மீது குடும்பத்தினர் புகார் அளித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுமியின் சடலம் அதே பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தற்போது தலைமறைவாக உள்ள சந்தோஷை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
0
0