விவசாயிகள் போராட்டத்தில் திடீர் ட்விஸ்ட்..! போராட்டத்தை வாபஸ் வாங்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை..?

9 November 2020, 8:14 pm
amarinder_singh_updatenews360
Quick Share

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கிசான் தொழிற்சங்கங்களுக்கு விடுத்த கோரிக்கையில் பயணிகள் ரயில்களை மாநிலத்தில் செல்ல அனுமதிக்க தங்களது ரயில் முற்றுகையை முற்றிலுமாக நீக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டைக் கோருவது குறித்து பேசியதையடுத்து கிசான் தொழிற்சங்கங்களுக்கு அமரீந்தர் சிங் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அரசாங்க அறிக்கையின்படி, மாநிலத்தில் சரக்கு ரயில்களின் சுமூகமான மற்றும் பாதுகாப்பான இயக்கம் குறித்த தனது உறுதிமொழியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பஞ்சாபில் சரக்கு ரயில்களை மீண்டும் தொடங்க ரயில்வே சனிக்கிழமை மறுத்துவிட்டது. மேலும் ரயில் மறியல் போராட்டங்கள் நடப்பதால் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று ரயில்வே கூறியுள்ளது.

மத்திய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தங்கள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கிய செப்டம்பர் 24 முதல் பஞ்சாபில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக அக்டோபர் 21’ம் தேதி, உழவர் சங்கங்கள் தங்களது ரயில் மறியல் போராட்டத்திலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சரக்கு ரயில்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் ரயில்வே, விவசாயிகள் இன்னும் ரயில் தடங்களைத் தடுக்கிறார்கள் என்று கூறி சேவையை மீண்டும் நிறுத்தியது.

இதனால் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதற்கு வசதியாக சேவைகள் மீண்டும் ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டிய அவசியம் இருப்பதால் பஞ்சாப் முதல்வர் விவசாயிகளை ரயில் மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 22

0

0