உட்கட்சி பூசல் விவகாரம்: சோனியாகாந்தியுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு

6 July 2021, 9:57 pm
Quick Share

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆகியோர் சமீப காலங்களில் முரண்படுகிறார்கள்.கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங்குக்கு மாநிலத்தில் முக்கியத்துவம் வழங்கப்படாததால், ஆம் ஆத்மி கட்சியில் சேருவேன் என்ற வதந்திகளைத் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கடந்த வாரம் சித்துவுடன் சமரசம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அவருக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும் கட்சியின் முக்கிய பணிகள், அடுத்தாண்டு சட்டப்பேரவை (2022) தேர்தலுக்கு தயாராகுவது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Views: - 116

0

0