பஞ்சாப் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் முதலமைச்சராக நியமனம் : காங்கிரஸ் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 6:19 pm
Punjab CM -Updatenews360
Quick Share

பஞ்சாப் மாநிலத்தின் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார்.

உட்கட்சி பூசல் மற்றும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி காரணமாக பதவியை ராஜினாமா செய்தாக கூறப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 3 முறை தான் அவமானப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய முதல்வரை தேர்தடுப்பதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படாதல், இன்று மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைத்திருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அடுத்த முதல்வர் யார் என்பதை கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என கூட்டம் ஒத்திவைத்ததற்கு காரணம் என கூறப்பட்டது.

அதே சமயத்தில் இன்னும் சற்று நேரத்தில் பஞ்சாபின் புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் எம்எல்ஏ சுக்ஜிந்தர் தெரிவித்திருந்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாகர், சுக்ஜிந்தர் சிங், பிரதாப் சிங் மற்றும் அம்பிகா சோனியை ஆகியோரை முதல்வராக தேர்வு செய்ய காங்கிரஸ் பரிசீலித்து வருவதாகவும், இவர்களில் ஒருவர் தான் அடுத்த முதல்வர் என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை நியமனம் செய்து காங்கிரஸ் அறிவித்துள்ளது. சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வாகியுள்ளார் என மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அறிவித்துள்ளார்.

Views: - 155

0

0